பிரதமரிடம் இபிஎஸ் வலியுறுத்திய 3 கோரிக்கைகள்!

27 ஆடி 2025 ஞாயிறு 07:51 | பார்வைகள் : 157
திருச்சியில் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சந்தித்தபோது, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
துாத்துக்குடியில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, நேற்று இரவு, 10:20 மணிக்கு திருச்சி வந்த பிரதமர் மோடியை, இபிஎஸ் சந்தித்து பேசினார். பிரதமரிடம் நலம் விசாரித்த இபிஎஸ், தன் பிரசார பயணம் குறித்து விளக்கினார். அப்போது மோடியிடம், 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
அதன் விபரம் பின்வருமாறு:
* விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விவசாயிகளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும்.
* கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
* தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும்
மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்தார்.