அவசர அவசரமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்!

27 ஆடி 2025 ஞாயிறு 14:06 | பார்வைகள் : 1614
கோயம்பத்தூரைச் சேர்ந்தவர் 'கேட்டரிங்' தொழில் மூலம் பிரபலமான மாதம்பட்டி ரங்கராஜ். 2019ல் வெளிவந்த 'மெஹந்தி சர்க்கஸ்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கடுத்து 'பெண்குயின்' படத்தில் நடித்தார். அந்தப் படங்களுக்குப் பிறகு அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை. கடந்த வருடம் முதல் 'குக் வித் கோமாளி' டிவி நிகழ்ச்சியில் 'ஜட்ஜ்' ஆக அறிமுகமாகி பிரபலமானார். தற்போது ஒளிபரப்பாகி வரும் அந்த நிகழ்ச்சியிலும் 'ஜட்ஜ்' ஆக இருக்கிறார்.
இதனிடையே சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸ்டலா அவருடைய சமூக வலைத்தளத்தில் நேற்று 'மிஸ்டர் அன்ட் மிசஸ் ரங்கராஜ்' எனப் பதிவிட்டு அவருக்கு ரங்கராஜ் பொட்டு வைக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்தார். இன்று காலை 'பேபி லோடிங் 2025, நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம், 6வது மாதம்,” எனப் பதிவிட்டுள்ளார். அதோடு அவரது புரொபைல் படத்தையும் ஜோடிப் படமாக மாற்றியுள்ளார்.
ஜாய் கிரிஸ்டலா ஏற்கெனவே திருமணமானவர். ஜோதிகா நடித்த 'பொன்மகள்' படத்தை இயக்கிய பிரட்ரிக்-கைத் திருமணம் செய்து, அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. மாதம்பட்டி ரங்கராஜும் ஏற்கெனவே திருமணமானவர். அவருக்கு ஸ்ருதி என்பவருடன் திருணமாகி, இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
கடந்த வருடம் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக வந்த போது, அவருக்கு ஆடை நிபுணராக கிரிஸ்டலா இருந்திருக்கிறார். அந்த சமயத்தில்தான் அவர்கள் காதலில் விழுந்துள்ளதாகத் தெரிகிறது. இருவரும் அவர்களது முந்தைய ஜோடியை விட்டுப் பிரிந்து, சில மாதங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுவிட்டு, அதைத் தற்போது தான் அறிவித்துள்ளார்கள்.
சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தி பிரிந்ததும், ஜெயம் ரவி, பாடகி கெனிஷாவுடன் சுற்றி வருவதும் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுபோல மனைவி, இரண்டு மகன்கள் இருந்தும் அவர்களை விட்டுப் பிரிந்து ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இது குறித்து பல கமெண்ட்டுகளைப் பார்க்க முடிகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025