புதிய முயற்சியில் ஏ.ஆர்.ரஹ்மான்...

27 ஆடி 2025 ஞாயிறு 15:06 | பார்வைகள் : 159
இசையுடன் செயற்கை நுண்ணறிவு இணையும் புதிய முயற்சியில் ஓபன் ஏஐ நிறுவனத்துடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கைகோர்த்துள்ளார்.
ஓபன் ஏஐ தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மெனை சந்தித்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், Secret mountain இசைப் பயணம் தொடர்பாக ஆலோசித்ததாகவும், இந்தியர்களின் மனங்களை செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த இது தயார் செய்யும் என்றும் கூறியுள்ளார். Secret mountIN என்ற பெயரில் பாடல் என்ற பாடலை கடந்த ஆண்டு தனது யூடியூப் சேனலில் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டிருந்தலார்.
லூனா என்ற பெண் தனது கதையை கூறும் விதத்தில் இந்த பாடல் இருந்தது. இசையின் புதிய பரிணமாமமாக செயற்கை நுண்ணறிவு இணைக்கும் இந்த முயற்சியில் ஓபன் ஏஐ நிறுவன தலைமை செயல் அதிகாரியுடன் ஏ.ஆர்.ரகுமான் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சீக்ரெட் மவுன்ட்டெய்ன்’ என்ற இசை ஆல்பத்துக்கான ஆரம்ப்பபுள்ளியாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது. நிகழ்கால தலைமுறைகள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள தேவையான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் திறன்களை இந்தியர்கள் பயன்படுத்துவது குறித்த முன்னோட்டமாக இது அமையப் போகிறது என்று ரஹ்மான் தமது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.