‘ஸ்பிரிட்’ படத்துக்கு அனிருத் இசையமைக்கிறாரா ?

27 ஆடி 2025 ஞாயிறு 15:06 | பார்வைகள் : 2450
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா, ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அனிமல் படம் ஆணாதிக்கக் கருத்துகள் விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.
அவர் இயக்கிய அர்ஜுன் ரெட்டி படத்தின் மீதும் இந்த விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவதால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி கதாநாயகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அடுத்து அவர் பிரபாஸின் 25 ஆவது படமான ஸ்பிரிட் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படம் ஒரு காவல்துறை அதிகாரியைப் பற்றிய கதை என சொல்லப்படுகிறது.
இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்துக்கு இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025