ஒன்ராறியோவில் புயல் மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான எச்சரிக்கைகள்

28 ஆடி 2025 திங்கள் 07:54 | பார்வைகள் : 102
வடமேற்கு ஒன்ராறியோவில் சில பகுதிகளில் சுழல்காற்று (tornado) மற்றும் தீவிர இடியுடன் கூடிய மழை பற்றிய எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
சுழல்காற்றுக்கான எச்சரிக்கை காகாபெகா பேல்ஸ் Kakabeka Falls, வைற்பிஸ் லேக் Whitefish Lake, அரேவ் லேக் Arrow Lake, அடிகோகன் Atikokan, Shebandowan மற்றும் கியுடிகோ பார்க் Quetico Park பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சன்சையின் Sunshine, கிளென்வாட்டர் Glenwater மற்றும் ஓகோர்னர் O'Connor பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படக்கூடியதாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
புயல் காற்று தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும் படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.