Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது; பியூஷ் கோயல் தகவல்

அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் எப்போது; பியூஷ் கோயல் தகவல்

28 ஆடி 2025 திங்கள் 09:50 | பார்வைகள் : 141


அமெரிக்காவுடனான எங்கள் பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக முன்னேறி வருகின்றன. 2025ம் ஆண்டு அக்டோபர்- நவம்பர் காலக்கெடுவிற்குள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்'' என மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பிரிட்டன் உடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. இந்த, உத்வேகத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் பிற முக்கிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:

இந்தியா எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்று இந்தியா வலிமையானதாக இருக்கிறது. விவசாயம் மற்றும் எத்தனால் போன்ற முக்கியமான துறைகளில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியா விதிமுறைகள் படியே, பிரிட்டன் உடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

எதிர்காலத்திலும் நியூசிலாந்து, ஓமன், அமெரிக்கா அல்லது 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமாக இருந்தாலும் இந்தியாவின் ஒப்பந்தங்கள் நன்கு சிந்தித்து உத்தியுடன் செய்யப்படும். அமெரிக்காவுடனான எங்கள் பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக முன்னேறி வருகின்றன.

2025ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் காலக்கெடுவிற்குள், பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்திற்காக முடிவு செய்து, ஒரு நல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்