Paristamil Navigation Paristamil advert login

பெண்கள் திருமணத்திற்குப் பின் உடல் எடை அதிகரிப்பதற்கு உடலுறவு கொள்வதுதான் காரணமா..?

பெண்கள் திருமணத்திற்குப் பின்  உடல் எடை அதிகரிப்பதற்கு உடலுறவு கொள்வதுதான் காரணமா..?

30 ஐப்பசி 2021 சனி 13:14 | பார்வைகள் : 8914


 உண்மையில் அப்படி ஏதும் மருத்துவ ஆய்வுகள் நிரூபிக்கப்படவில்லை. இதுவரை உடலுறவுக்கும், உடலமைப்பில் மாற்றம் நிகழ்வதற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் இல்லை.

 
உடலுறவு மேற்கொள்வது பலவகையில் நன்மைகளே தவிர தீங்கு இல்லை என ஆய்வுகள் மூலமாகவே நிரூபிக்கப்பட்ட உண்மை. அதாவது உடலுறவு மேற்கொள்வது மன அழுத்தத்தை நீக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும், மனநிலையை குஷிபடுத்தும் , இதயத்திற்கு நல்லது என பல வகை உடல் நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இருப்பினும் மக்களிடம் உடலுறவு மேற்கொள்வது பெண்களின் உடல் எடையை அதிகரிக்கும் என்கிற கட்டுக்கதை உலா வந்துக் கொண்டிருக்கிறது.
 
உண்மையில் அப்படி ஏதும் மருத்துவ ஆய்வுகள் நிரூபிக்கப்படவில்லை. இதுவரை உடலுறவுக்கும், உடலமைப்பில் மாற்றம் நிகழ்வதற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் இல்லை. ஒருவேளை உங்களுக்கு உங்கள் தோற்றத்தில் மாற்றம் உண்டாகியிருப்பது போல் தோன்றலாம். அது உங்கள் ஹார்மோன்
 
மாற்றங்களாலும் நிகழலாம். முதல் முறை உடலுறவு மேற்கொள்வதும், அது அடிக்கடி தொடர்ந்தாலும் அந்த மகிழ்ச்சி உடலில் ஹார்மோன் மாற்றத்தை நிகழ்த்தலாமே தவிற உடல் எடைக்கும் செக்ஸுக்கும் தொடர்பில்லை.
 
அதாவது , ஈஸ்ட்ரோஜின், புரோகெஸ்டரோன் மற்றும் DHEA ஆகிய செக்ஸ் ஹார்மோன்கள்தான் உடல் எடைக்குக் காரணம். இந்த ஹார்மோன் பிரச்னை என்பது பெண்கள் வயதுக்கு வரும்போதும், சரியான மாதவிடாய் வராதபோதும் அல்லது மாதவிடாய் நிற்கும் காலகட்டத்திலும் கூட நிகழும். எனவே உங்கள் ஹார்மோனை சீராக வைத்துக்கொள்ள முறையான உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையுமே உதவும்.
 
 
அதேபோல் ஹார்மோனால் உடல் எடை அதிகரிப்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நிகழும். அதேபோல் உடலுறவு என்பதும் உடற்பயிற்சிக்கு சமமானது என மருத்துவர்களே தெரிவிக்கின்றனர். உதாரணத்திற்கு 30 நிமிடங்கள் உடலுறவு மேற்கொண்டாலும் 100 - 200 கலோரிகளைக் குறைக்கலாம். அதுவும் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் இந்த அளவில் உடல் எடைக் குறையும். எனவே உடலுறவு என்றும் உடலமைப்பை மாற்றாது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்