Paristamil Navigation Paristamil advert login

இந்த எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் அதிக கவனம் தேவை.....

இந்த எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் அதிக கவனம் தேவை.....

28 ஆடி 2025 திங்கள் 10:24 | பார்வைகள் : 156


இந்த எண்களில் இருந்து மோசடி அழைப்புகள் வந்தால் என்னென்ன செய்து அதில் இருந்து தப்பிக்கலாம் என்பது குறித்த வழிகளை தெரிந்து கொள்ளலாம்.

போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு TRAI ஒரு புதிய கொள்கையை கொண்டு வந்தது.

இந்த மோசடி அழைப்புகளை தடுக்க AI அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் ஆபரேட்டர்கள் பயன்படுத்துகின்றனர்.

அரசு இது மாதிரியான முயற்சிகளை கையாண்டு செய்தாலும் சைபர் குற்றவாளிகள் போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

அதாவது VoIP (Voice over Internet Protocol) அல்லது இணைய அடிப்படையிலான தொலைபேசி அழைப்புகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர்.

அரசு உருவாக்கியுள்ள சைபர் குற்ற விழிப்புணர்வு போர்ட்டலானது இணைய ஆதாரங்கள் அல்லது சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகள் குறித்து கவனமாக இருக்க கூறுகிறது.

இத்தகைய அழைப்புகள் வந்தால் அரசின் சக்ஷு போர்ட்டல் அல்லது செயலி வழியாகவும் புகாரளிக்கலாம்.

தாய்லாந்தின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான NBTC இன் படி VoIP (Voice over Internet Protocol) அல்லது இணைய அடிப்படையிலான தொலைபேசி அழைப்புகளானது +697 அல்லது +698 இல் தொடங்குகின்றன.

இந்த அழைப்புகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதால் மோசடி காரர்கள் இதனை பயன்படுத்துகின்றனர். மேலும் அவர்கள் Virtual Private Networks (VPNs) ஐப் பயன்படுத்துவதால் அவர்களின் உண்மையான இருப்பிடத்தை மறைக்கிறது.

இந்த மாதிரியான எண்கள் பொதுவாக ஆன்லைன் மோசடிகள் அல்லது மார்க்கெட்டிங் நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றன. இந்த அழைப்புகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.

ஒருவேளை நீங்கள் இந்த மோசடி அழைப்புகளை எடுத்தாலும், எந்த தனிப்பட்ட தகவலையும் பகிர வேண்டாம். அதாவது அவர்கள் அரசு அதிகாரிகள் போலவும், வங்கி பிரதிநிதிகள் போலவும் ஆள் மாறாட்டம் செய்வார்கள்.

அப்போது நீங்கள் அவர்களிடம் திரும்ப அழைப்பு எண்ணைக் கேளுங்கள். அதனை அவர்கள் தர மறுத்தால் மோசடிக்காரர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

போலி அழைப்புகள் மற்றும் செய்திகள் தொடர்பாக அரசு தொடங்கியுள்ள சஞ்சார் சாதி இணையதளத்தில் சக்ஷு போர்ட்டலில் புகார் அளிக்கலாம்.

இந்த இணையதளத்திற்கு சென்று திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி எண்ணைப் புகாரளிக்கவும்.

 

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்