முத்திரைகள் மற்றும் பார்சல்களின் விலை அதிகரிப்பு: லா போஸ்ட் அறிவிப்பு!

28 ஆடி 2025 திங்கள் 20:42 | பார்வைகள் : 931
2026 ஜனவரி 1 முதல், லா போஸ்ட் (La Poste) முத்திரைகள் மற்றும் பார்சல்களின் விலையை சராசரியாக 7.4% உயர்த்தவுள்ளது.
விலை மாற்றங்கள்:
- பச்சை நிறத்திலான முத்திரை (timbre vert) 1.39 யூரோவிலிருந்து 1.52 யூரோவாக அதிகரிக்கவுள்ளது.
- பதிவு செய்யப்பட்ட 20 கிராம் கடிதம்: 5.74 யூரோவிலிருந்து 6.11 யூரோவாகவும்
- Lettre Services Plus (முக்கிய ஆவணங்கள்): 3.15 யூரோவிலிருந்து 3.47 யூரோவாகவும்
- E-lettre rouge (அவசர கடிதங்கள்): 1.49 யூரோவிலிருந்து 1.60 யூரோவாகவும்
- சர்வதேச 20 கிராம் கடிதம்: 2.10 யூரோவிலிருந்து 2.25 யூரோவாகவும்
- பொது மக்கள் அனுப்பும் உள்ளூர் மற்றும் சர்வதேச Colissimo பார்சல்கள் சராசரியாக 3.4% அதிகரிக்கவுள்ளது.
இந்த மாற்றங்களுக்கு காரணமாக கடிதங்களின் அனுப்பும் அளவு குறைவதால் வருமான இழப்பு ஏற்படுவது குறிப்பிடப்பட்டுள்ளது.
லா போஸ்ட் ஆண்டுக்கு 500 மில்லியன் யூரோ இழப்பை சந்திக்கிறது. பொதுத் திட்டச் சேவைகளுக்கு அரசின் முழுமையான நிதியுதவி இல்லாததால், 2023-ல் மட்டும் 1.2 பில்லியன் யூரோவை இழந்துள்ளது. இருப்பினும், 2025-ல் ஒரு குடும்பம் தபால் சேவைக்கு சராசரியாக 28 யூரோ செலவழிக்கிறது என்றும், கடித அனுப்பும் அளவு குறைவதால் இந்தச் செலவு 2026-ல் 6% குறையும் என்றும் லா போஸ்ட் தெரிவித்துள்ளது.