தீவிபத்துக்குள் சிக்கிய சுற்றுலா விடுதி! - மூவர் பலி! - இருவரைக் காணவில்லை!!

29 ஆடி 2025 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 703
மாற்றுத்திறனாளிகள் தங்கியிருந்த சுற்றுலாவிடுதி ஒன்றில் தீ பரவியதில், மூவர் பலியாகியுள்ளனர். மேலும் இருவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 28, நேற்று திங்கட்கிழமை அதிகாலை இத்தீ விபத்து Montmoreau (Charente) நகரில் இடம்பெற்றுள்ளது. 60 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஒருவரும், குறித்த சுற்றுலா விடுதியின் உரிமையாளரும், அடையாளம் காணப்படாத மற்றொருவர் என மூவரது சடலங்கள் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேவேளை, மேலும் இருவரைக் காணவில்லை எனவும், கட்டிடத்தின் கூரை இடிந்து விழுந்த நிலையில் அவர்கள் அதற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் மொத்தமாக 14 பேர் தங்கியிருந்ததாகவும், அவர்கள் 20 தொடக்கம் 75 வயது வரையுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.