தேநீர் குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா?
27 ஐப்பசி 2021 புதன் 11:32 | பார்வைகள் : 9258
பிளாக் டீ: நம் முன்னோர்கள் கசாயம் என்று கூறும் இந்த பிளாக் டீ தலைவலிக்கு நல்ல நிவாரணமாக இருக்கும் . அதிலும் ஒற்றை தலைவலியாக இருந்தால் பிளாக் டீ நல்ல மருந்தாக இருக்கும். இதை தவிர மன அழுத்தம், இரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு , குறைந்த இரத்த அழுத்தத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
கிரீன் டீ: கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. மேலும், கிரீன் டீயிலுள்ள எல்-தியானைன் என்ற பொருள் மூளையை அமைதிப்படுத்த உதவுகிறது. மேலும் கிரீன் டீயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதை அருந்துவதன் மூலமாக இளமையுடனே இருக்கலாம். வயதான தோற்றம் தடுக்கப்படும். புற்றுநோய் மற்றும் கட்டிகள் ஏற்படுவதை தடுப்பதுடன் உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த டீயை அருந்துவது நல்லது.
மசாலா டீ: டீ துளுடன் ஏலக்காய் , இலவங்கபட்டை, கிராம்பு, இஞ்சி போன்றவற்றை சேர்த்தால் அது மசாலா டீ. இதில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி மருத்துவ குணம் உள்ளது. தொண்டையில் உள்ள பிரச்சனை சளி, வரட்டு இரும்பல், உடல் வீக்கம், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என பலவிதமான நன்மைகளை தருகிறது.
வெந்தய டீ: வெந்தயத்தை வெந்நீரில் கொதிக்க வைத்து அதில் நாட்டு சர்க்கரையை சேர்த்து வடிகட்டி தினமும் அருந்துவதினால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்னை குறைவதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் குறையும்.
புதினா டீ: புதினா தேநீர் நறுமணத்துடன் இருக்கும். இதை அருந்துவதினால் குமட்டல், வாந்தி மற்றும் மலச்சிக்கலை தீர்க்கும். மேலும், உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதுடன், சளி தொந்தரவுகள், ஆஸ்துமா மற்றும் தலைவலி போன்றவற்றை நீக்கும் குணமுடையது. இந்த புதினா தேநீரினால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும்.
இஞ்சி டீ: உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இஞ்சியை டீ துளுடன் சேர்த்து குடியுங்கள். புத்துணர்வை அதிகரிக்க செய்ய உதவுவதுடன் உணவு செரிமானம் அடையவும், வாய் குமட்டலை தடுக்கவும் இஞ்சி தேநீர் உதவுகிறது. மேலும் இந்த தேநீர் முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது.
லெமன் டீ: இந்த தேநீரில் உள்ள சிட்ரஸ், உணவு செரிமானம் அடைவதற்கு உதவி புரிகிறது. மேலும் உடல் எடையை குறைக்கவும் நல்லது. உணவு உண்ட பின் இந்த லெமன் டீயை அருந்துவது நல்லது. இந்த தேநீர் லெமன் வாசனை மிகுந்ததாக இருக்கும் அதனால் வாந்தி, மயக்கம் உள்ளவர்கள் இதை அருந்துவது நல்லது.
ப்ளு டீ: இந்த ப்ளு டீ கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. அதனால் உடல் எடையை குறைப்பவர்கள் இந்த தேநீரை அருந்துவது நல்லது. கிரீன் டீயை விட இந்த ப்ளு டீயில் ஆண்டி ஆக்சிடன் அதிகமாக உள்ளது. அதனால் இது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணமுடையது.