தாய்லாந்தும் கம்போடியாவும் யுத்தநிறுத்தம்

29 ஆடி 2025 செவ்வாய் 08:08 | பார்வைகள் : 290
தாய்லாந்தும் கம்போடியாவும் சமாதான பேச்சுவார்த்தைகளின் பின்னர் உடனடி நிபந்தனையற்ற யுத்தநிறுத்தத்திற்கு இணங்கியுள்ளன.
28.07.2025 நள்ளிரவு முதல் யுத்தநிறுத்தம் நடைமுறைக்குவரும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைதியை ஏற்படுத்துவதை நோக்கிய முதலாவது முக்கியமான நடவடிக்கை இது என அவர்தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகத்திற்கான முன்நிபந்தனையாக இரண்டு நாடுகளும் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.