பிரிட்டனில் உல்லாசப் பயணிகளின் கண்முன்னே சரிந்த பாறை - அச்சத்தில் உறைந்த மக்கள்

29 ஆடி 2025 செவ்வாய் 13:01 | பார்வைகள் : 256
பிரிட்டனின் கோடைக்கால கொண்டாட்டத்திற்கு பெயர் போன கடற்கரை ஒன்றில், சூரிய குளியல் எடுத்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளின் அருகில் ஒரு பெரும் பாறை பயங்கரமாக சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“CLIFF HORROR” (பாறை திகில்) என வர்ணிக்கப்படும் இந் நிகழ்வு, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை திகிலடையச் செய்தது.
சில அடி தூரத்தில் மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிய சுற்றுலாப் பயணிகள் அலறி அடித்து ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த சம்பவத்தில் நூலிழையில் உயிர் தப்பியவர்கள் இன்றும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என கூறப்படுகின்றது.
இந்தப் பாறை சரிவால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டாலும், இச்சம்பவம் கடற்கரைகளுக்கு வரும் மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.