Paristamil Navigation Paristamil advert login

நிதிப்பற்றாக்குறையில் சிக்கியுள்ள மரீன் லு பென் கட்சி!!

நிதிப்பற்றாக்குறையில் சிக்கியுள்ள மரீன் லு பென் கட்சி!!

29 ஆடி 2025 செவ்வாய் 13:41 | பார்வைகள் : 862


 

மரீன் லு பென்னின் Rassemblement national கட்சி பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. 2027 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரப்பணிகளுக்கு தேவையான நிதி கட்சியிம் இல்லை எனவும், அனுசரணையாளர்களின் வரவும் போதிய அளவு இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கு மரீன் லு பென் 3.5 மில்லியன் யூரோக்கள் பணம் செலுத்தவேண்டும். முதல்கட்டமாக 1.5 மில்லியன் யூரோக்களை அவர் செலுத்தியுள்ளார். இரண்டாம் தவணைப்பணத்தினை வரும் ஓகஸ்ட் மாதத்தில் செலுத்தவேண்டும். ஆனால் போதிய பணம் இல்லாமல் கட்சி தத்தளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, 2027 ஆம் ஆண்டு இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரப்பணிகளில் ஈடுபடவும் போதிய பணம் இல்லாமல், அனுசரணையாளர்களையும் பெற முடியாமல் கட்சி தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்