Paristamil Navigation Paristamil advert login

டெஸ்லாவிற்கு போட்டியாக இந்தியாவில் முதல் ஷோரூமை திறந்த VinFast EV கார் நிறுவனம்

டெஸ்லாவிற்கு போட்டியாக இந்தியாவில் முதல் ஷோரூமை திறந்த VinFast EV கார் நிறுவனம்

29 ஆடி 2025 செவ்வாய் 14:01 | பார்வைகள் : 170


வியட்நாமை சேர்ந்த மின்சார வாகன உற்பத்தியாளர் VinFast, இந்தியாவின் முதல் ஷோரூமினை குஜராத்தின் சூரத்தில் தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்வு டெஸ்லா இந்தியாவில் அறிமுகமான சில நாட்கள் கழித்து நிகழ்ந்துள்ளது.

3,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஷோரூம், Piplod பகுதியில் செயல்படுகிறது.

இங்கு விரைவில் வெளியாகவிருக்கும் VF 6 மற்றும் VF 7 என்ற பிரீமியம் எலக்ட்ரிக் SUV மொடல்களின் டிஸ்ப்ளே, வாங்கும் முறைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் வழங்கப்படும்.

இந்தியா, VinFast நிறுவனத்திற்காக வலதுபுறம் ஓட்டும் மொடல்களுக்கு முதல் சந்தையாக இருக்கிறது.

இந்நிறுவனம் 2025 முடிவுக்குள் 27 நகரங்களில் 35 ஷோரூம்கள் தொடங்கும் திட்டத்தில் உள்ளது.

ஜூலை 15, 2025 அன்று VF 6 மற்றும் VF 7 மொடல்களுக்கான ப்ரீ-புக்கிங் துவங்கியது. வாடிக்கையாளர்கள் ரூ.21,000-க்கு (முழுமையாக திருப்பிச் செலுத்தக்கூடிய தொகை) நிறுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் VinFastAuto.in அல்லது ஷோரூம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

இந்த வாகனங்கள் தூத்துக்குடியில் உள்ள VinFast தொழிற்சாலையில் உள்ளூர் அளவில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவை முக்கிய EV உற்பத்தி மையமாக மாற்றும் திட்டத்தில் ஒரு பாரிய படியாகும்.

டெஸ்லாவும் தற்போது இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் திறந்து, Model Y காரை காட்சிக்கு வைத்துள்ளது.

ஆனால் VinFast, இந்திய சந்தையில் நீண்டநாள் நிலையாக திட்டமிட்டு உற்பத்தி மற்றும் விற்பனையை இணைக்க முனைவதாக தெரிகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்