இலங்கையில் குடும்பத்துடன் சடலாக மீட்கப்பட்ட அரசியல்வாதி!

29 ஆடி 2025 செவ்வாய் 15:01 | பார்வைகள் : 694
யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலங்களாக யஹலதென்னவில் உள்ள அவர்களது வீட்டில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சம்பிகா விஜேரத்ன (53), அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் முருத்தலாவை கம்பியாடிய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை , அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்களும் வீட்டின் அறை ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் 52 வயதுடைய எதிர்க்கட்சித்தலைவர், அவரது 44 வயதுடைய மனைவி மற்றும் அவர்களது 17 வயதுடைய மகள் ஆவர்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் பேராதனை பொலிஸார் சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.