Paristamil Navigation Paristamil advert login

Bondy : காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய நபர் - மரத்தில் மோதி படுகாயம்!!

Bondy : காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய நபர் - மரத்தில் மோதி படுகாயம்!!

29 ஆடி 2025 செவ்வாய் 17:48 | பார்வைகள் : 986


 

காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற மகிழுந்து ஒன்று மரத்தில் மோதியுள்ளது. சாரதி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 28, நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் Bondy (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. 93 ஆம் பிரிவு காவல்துறையினர் Avenue de Rosny வீதியில் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான மகிழுந்து ஒன்று பயணிப்பதை பார்த்து, அதனை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

ஆனால் குறித்த மகிழுந்து நிற்காமல் தொடர்ந்து வேகமாக பயணித்துள்ளது.

வேகமாக பயணித்த மகிழுந்து வீதியை விட்டு விலகி, மரம் ஒன்றில் மோதியுள்ளது. இதில் சாரதி படுகாயமடைந்தார்.

பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்