Bobigny : வீடொன்றில் இருந்து €34,000 யூரோக்கள் பறிமுதல்!!
 
                    29 ஆடி 2025 செவ்வாய் 19:24 | பார்வைகள் : 4219
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Bobigny (Seine-Saint-Denis) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Rue des Marais வீதியில் நின்று கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த ஒருவரை கண்காணிப்பு காவல்துறையினர் நெருங்கி, அவரை விசாரித்துக்கொண்டிருந்தபோது, அவர் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். காவல்துறையினரின் கைகளை கடித்துள்ளார்.
பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, அவருடன் இருந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த நபரின் வீடு சோதனையிடப்பட்டபோது, அவரிடம் இருந்து கஞ்சா, கொக்கைன் போதைப்பொருட்களும், €34,000 யூரோக்கள் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan