பிரான்சின் 'இரண்டில் ஒருவர்' பெண் மருத்துவர்! - முதன்முறையாக பதிவு!!

30 ஆடி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 2237
பிரான்சில் சேவையில் உள்ள மருத்துவர்களில் 50 சதவீதமானவர்கள் பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனவரி 1, 2025 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வின் படி மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் என மொத்தமாக 237,214 பேர் சேவையில் உள்ளதாகவும், அவர்களில் 118,957 பேர் பெண்கள் எனவும், 118,257 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 117,781 ஆண் மருத்துவர்களும் 115,635 பெண் மருத்துவர்களும் சேவையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, பிரான்சின் வரலாற்றில் முதன்முறையாக பெண் மருத்துவர்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகமாக பதிவானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.