Paristamil Navigation Paristamil advert login

யாழில் மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு

யாழில் மர்மமான முறையில் இளைஞன் உயிரிழப்பு

30 ஆடி 2025 புதன் 14:50 | பார்வைகள் : 1063


மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அருகில் உள்ள ஆலயத்தில் இடம் பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து விட்டு வீடு திரும்பும் பொழுது இளைஞன் வீட்டுக்கு முன்னால் மர்மமான முறையில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இளைஞர் இவ்வாறான நிலையில் காணப்படுவதை கண்ட உறவினர்கள் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த பொழுதும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர் செல்வச்சந்திரன் மிமோஜன் வயது 27 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது கால் பாதத்தில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் உடல் கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்