Paristamil Navigation Paristamil advert login

மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்க ChatGPT-யில் Study Mode அறிமுகம்

மாணவர்களின் சிந்தனை திறனை வளர்க்க ChatGPT-யில் Study Mode அறிமுகம்

30 ஆடி 2025 புதன் 17:18 | பார்வைகள் : 269


OpenAI நிறுவனம் ChatGPT-யில் புதிய "Study Mode" எனும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது மாணவர்கள் தங்களின் சுய சிந்தனை திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முறையில், மாணவர்கள் கேள்விகள் கேட்கும்போது ChatGPT நேரடியாக பதில் சொல்லாது, பதிலுக்குப் பதில் வினாக்களை முன்வைத்து, அவர்களின் புரிதலை சோதிக்கும்.

இந்த வசதி தற்போது Free, Plus, Pro மற்றும் Team திட்டங்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது.

 

Edu plan கொண்ட பள்ளிகளுக்கு, இந்த வசதி விரைவில் அறிமுகமாகும் என OpenAI தெரிவித்துள்ளது.

 

2022-ல் ChatGPT வெளியானதும், மாணவர்கள் அதனை உபயோகித்து பாடங்கள் செய்ய தொடங்கினர். இதனால் கல்வி வளாகங்களில் AI தடைகள் ஏற்பட்டன.

 

ஆனால் தற்போது, ChatGPT கல்வியில் ஒரு பகுதியாய் மாறியுள்ள நிலையில், Study Mode கல்வி பயிற்சிக்கு ஒரு புதிய வாசலாக அமைந்துள்ளது.

 

இது மாணவர்களின் படிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. எனினும், மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் சாதாரண Mode-க்கு திரும்பலாம் என்பதால், இது முழுமையாக பயனளிக்கும்படி இருக்க வேண்டுமெனில் மாணவர்களின் உறுதிப்பாடு முக்கியம் என OpenAI கூறுகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்