சாதனைகளை படைக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம்
30 ஆடி 2025 புதன் 18:05 | பார்வைகள் : 1197
நடிகர் விஜய் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் வெளிநாட்டு உரிமை விற்பனை குறித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியாவதற்கு இன்னும் ஐந்து மாதங்களுக்கு மேல் இருக்கும்போதே, இதன் வெளிநாட்டு உரிமையை பெற்ற நிறுவனம் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
‘ஜனநாயகன்’ படத்தின் பிசினஸ் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், துபாயை சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனம் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் ஒவ்வொரு நாட்டிற்கான வெளியீட்டு உரிமையையும் தற்போது விற்பனை செய்து வருவதாகவும், கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்குமான விற்பனையும் முடிந்துவிட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இந்த நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘ஜனநாயகன்’ ரிலீசாவதற்கு இன்னும் ஐந்து மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில், இந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய நிறுவனம் அதற்குள் கோடிக்கணக்கில் பணத்தைச் சம்பாதித்து விட்டதாக கூறப்படும் செய்தி, திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது விஜய்யின் நட்சத்திர அந்தஸ்தையும், அவரது படங்களுக்கு உலக அளவில் இருக்கும் வரவேற்பையும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனைகளை படைக்கும் என்ற எதிர்பார்ப்பையும் இந்த செய்தி ஏற்படுத்தியுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan