அமெரிக்காவை தாக்க தொடங்கியுள்ள சுனாமி அலைகள்!

31 ஆடி 2025 வியாழன் 07:18 | பார்வைகள் : 438
ரஷ்யாவின் கடற்கரையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உண்டான சுனாமி அலைகள் அமெரிக்காவின் ஹவாயை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஹவாய் அருகே 6 அடி (1.8 மீ) உயரம் வரை சுனாமி அலைகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கம்சட்காவில் 3-4 மீ (10 முதல் 13 அடி) உயரத்திலும், ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் 60 செ.மீ (2 அடி) உயரத்திலும், அலாஸ்காவின் அலூடியன் தீவுகளில் அலை மட்டத்திலிருந்து 1.4 அடி (30 செ.மீ க்கும் குறைவான) உயரத்திலும் சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன.
2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகின் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்று புதன்கிழமை (30) அதிகாலை ரஷ்யாவின் தூர கிழக்கைத் தாக்கியது.
8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கம்சட்கா தீபகற்பத்தை உலுக்கி, வடக்கு பசிபிக் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகளைத் தூண்டியது.
1952 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இப்பகுதியில் ஏற்பட்ட மிக வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கடுமையான பின்னதிர்வுகள் ஏற்பட்டன.
நில அதிர்வு நிபுணர்கள் வரும் வாரங்களில் 7.5 ரிக்டர் அளவு வரை மேலும் நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.
வடக்கு குரில்ஸ்கைத் தாக்கிய சுனாமி அலை, குடியேற்றத்தின் சில பகுதிகளையும் உள்ளூர் மீன்பிடி வசதியையும் வெள்ளத்தில் மூழ்கடித்தது.
கம்சட்கா, குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் அலாஸ்கா, ஹவாய் மற்றும் நியூசிலாந்து வரை சுனாமி எச்சரிக்கைகள் ஒலித்தன.