Paristamil Navigation Paristamil advert login

கடும் நில அதிர்விலும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

கடும் நில அதிர்விலும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்

31 ஆடி 2025 வியாழன் 07:18 | பார்வைகள் : 1370


ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்ட போதும், மருத்துவர்கள் நோயாளிக்குத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் காணொளி இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த சம்பவம் ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரில் உள்ள மருத்துவமனையில் பதிவாகியுள்ளது.

ரஷ்யாவுக்கு அருகே இன்று காலை 8.7 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது.

மருத்துவமனையில் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த போது, நில அதிர்வு ஏற்பட்டதால், அவர்கள் ஒரு பெரிய சவாலை எதிர் கொண்டனர்.

இதன்போது மருத்துவர்கள் பதற்றம் அடையாமல் நோயாளிக்குத் தொடர்ந்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்