Paristamil Navigation Paristamil advert login

உக்ரைனின் பொருளாதாரத் தடை முடிவு தவறு - சீனா கடும் எச்சரிக்கை

உக்ரைனின் பொருளாதாரத் தடை முடிவு தவறு - சீனா கடும் எச்சரிக்கை

31 ஆடி 2025 வியாழன் 07:18 | பார்வைகள் : 487


சீன நிறுவனங்கள் மற்றும் நபர்களை குறிவைத்து உக்ரைன் விதித்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெறுமாறு சீனா கோரியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த 53 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக உக்ரைன் பிறப்பித்துள்ள தடைகள் மிகப் பாரிய அவசரமான மற்றும் தவறான முடிவு என சீனா எச்சரித்துள்ளது.

ஜூலை 27 அன்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒப்புதல் அளித்த புதிய உத்தரவில், ரஷ்யாவின் போர் முயற்சிக்கு உதவியதாக குற்றம் சாட்டப்படும் 53 நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

இது குறித்து ஜூலை 28 அன்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன், "இந்தத் தீர்மானம் தவறு. உக்ரைன் இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சீனாவின் சட்டப்பூர்வமான நலன்களை நாங்கள் உறுதியுடன் காப்போம்" என்று எச்சரித்துள்ளார்.

சீனாவின் அடைப்படைக் கொள்கையானது ஐ.நா. ஆதரவு இல்லாத தனிப்பட்ட தடைகளை விரோதப்படுத்துவது. இத்தடைகள் சர்வதேச சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் சீனா வலியுறுத்தியுள்ளது.

உலக நாடுகள் சீனாவை, ரஷ்யாவிற்கு இரட்டை நோக்கில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், அதாவது ட்ரோன், இரசாயனங்கள், ரொக்கெட் பாகங்கள் உள்ளிட்டவை வழங்குவதாக குற்றம்சாட்டுகின்றன.

ஆனால் சீனா இது தொடர்பாக போருக்கான நேரடி உதவியை முழுமையாக மறுத்து, தங்களது சட்டபூர்வமான வணிக நடவடிக்கைகள் மட்டுமே நடப்பதாக கூறி வருகிறது.

இந்த பரபரப்பின் பின்னணியில், செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன தலைவர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்திக்க உள்ளனர். இது இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்