செம்மணி புதைகுழியில் குழந்தையை கட்டியணைத்தப்படி என்புக்கூடு மீட்பு

31 ஆடி 2025 வியாழன் 11:16 | பார்வைகள் : 345
யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் 25 ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது எதிர்பாராத வகையில், சிறிய என்புக் கூடு ஒன்றை மற்றுமொரு என்புக்கூடு கட்டியணைத்தப்படி இருக்கும் என்புக்கூட்டுத்தொகுதி அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் 04 என்புக்கூடுகள் சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து வெளிப்பட்டன.
இந்த நிலையில், இதுவரையான காலப்பகுதியில் 115 என்புக்கூடுகள் வெளிப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவிக்கின்றார்.
இதேவேளை திருகோணமலை சம்பூரில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பது தொடர்பில் துறைசார் நிபுணர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.