சுறா புட்டு

31 ஆடி 2025 வியாழன் 14:00 | பார்வைகள் : 139
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அசைவ உணவுகளில் அலாதி பிடித்தம் உண்டு... அதிலும் எளிதில் செரிக்கக்கூடிய மீன் உணவுகள் என்றால் ஒரு பிடி பிடிப்பார்கள்.. அப்படி பட்ட சுறா புட்டு செய்வது எப்படி என இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;-சுறாமீன், நல்லெண்ணெய், இஞ்சி, கடுகு, வரமிளகாய், கொத்தமல்லி, சின்ன வெங்காயம், கருவேப்பிலை, மஞ்சள்தூள், உப்பு, மிளகுபொடி, கருவேப்பிலை, கொத்தமல்லி,
சுறாமீனை துண்டு துண்டாக நறுக்கி அதனை இட்லி அவிக்க பயன்படுத்தும், இட்லி சட்டியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும், மாவு போன்று வெந்த பிறகு அதில் உள்ள முள்ளை எடுத்து சதை பகுதியை மட்டும் தனியாக வைக்கவும்.
வாணலில் நல்லெண்ணெய் ஊற்றி சூடான பிறகு இஞ்சி, கடுகு, பூண்டு, வரமிளகாய், நறுக்கி வைத்த சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு பொண்ணிரமாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு கருவேப்பிலை, மஞ்சள்தூள், சேர்த்து வதக்கி அதில் சுறாமீனின் சதையினை சேர்த்து நன்றாக ஒரு சேர மிக்ஸ் செய்து கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, மிளகு பொடியினை தூவி விட்டு, கருவேப்பிலை, கொத்தமள்ளி தூவி எடுத்தால் அசத்தாலான சுறா பொட்டு ரெடி.
சுறா புட்டினை ரசம், மீன்குழம்பு ஆகியவற்றுடன் சாப்பிடலாம் கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறாபுட்டினை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பால் சுரக்க உதவும் என்ற கருத்தும் உண்டு.