சானியா மிர்சா வாழ்க்கை வரலாறு படத்தில் அக்ஷய் குமாரா?
 
                    31 ஆடி 2025 வியாழன் 14:00 | பார்வைகள் : 1112
கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்தியாவுக்காக டென்னிஸ் அரங்கில் பம்பரமாய் சுழன்றவர் சானியா மிர்சா. இதற்கிடையில் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கைத் திருமணம் செய்துகொண்டு துபாயில் வசிக்கத் தொடங்கினார்.
திருமணத்துக்குப் பிறகும் இருவரும் அவரவர் நாட்டை தங்கள் துறையில் பிரதிநிதித்துவம் செய்தனர். ஆனால் சமீபத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர். இதையடுத்து மாலிக் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகையைத் திருமணம் செய்துகொண்டார்.
இதற்கிடையில் சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாக எடுக்கப்படும் என 2019 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் இன்று வரை அது அடுத்தகட்டம் நோக்கி நகரவில்லை. இந்நிலையில் சமீபத்தில் சானியா மிர்சா கலந்துகொண்ட நேர்காணலில் அவர் பயோபிக் படத்தில் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நகைச்சுவையாக “அக்ஷய் குமார் நடித்தால் நன்றாக இருக்கும். நான் அவரது தீவிர ரசிகை. அவர் அந்த படத்தில் நடித்தால் காதலிக்கத் தயாராக இருக்கிறேன்” எனப் பேசியுள்ளார். அக்ஷய் குமார் தொடர்ந்து பயோபிக் படங்களாக நடிப்பதாக அவர் மேல் ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அதை நக்கலாக சானியா மிர்சா வெளிப்படுத்தியிருக்கலாம் என தெரிகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan