வாகன ஓட்டுநர் உரிமம் பெற 80,000 கூடுதல் தேர்வு இடங்கள் அறிவிப்பு!!

31 ஆடி 2025 வியாழன் 14:08 | பார்வைகள் : 2824
வாகன ஓட்டுநர் உரிமம் விரைவில் பெற இவ்வாண்டு முடிவுக்குள் 80,000 கூடுதல் தேர்வு இடங்கள் வழங்கப்படும் என்று உள்துறை துணைமந்திரி பிரான்சுவா-நொயல் பப்பே (François-Noël Buffet) அறிவித்துள்ளார்.
நடைமுறை தேர்வுக்காக சராசரியாக 80 நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. இதைத் தாண்டி, 108 புதிய ஆய்வாளர்கள் பணியில் சேர்க்கப்படுகின்றனர், ஓய்வு பெற்றவர்கள் மீண்டும் பணிக்கு அழைக்கப்படுவார்கள், அடுத்த ஆண்டு 10 புதிய இடங்களும் உருவாக்கப்படவுள்ளன.
வெற்றி விகிதம் 59 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் தேவையான அறிவும் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும் என்றும், இது அவர்கள் மன அழுத்தம் அடையும் நிகழ்வாக இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இத்திட்டம் உடனடி தீர்வை அளிக்கும் போது, பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, எதிர்காலத்தில் ஓர் ஆழமான சீர்திருத்தத்தையும் கொண்டு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.