Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு மக்களிடன் கிட்டத்தட்ட €98 பில்லியன் சேமிப்பில்!!

பிரெஞ்சு மக்களிடன் கிட்டத்தட்ட €98 பில்லியன் சேமிப்பில்!!

31 ஆடி 2025 வியாழன் 15:17 | பார்வைகள் : 1905


 

பிரெஞ்சு மக்களிடம் முன்னர் எப்போதும் இல்லாத அளவு சேமிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயுள் காப்பீட்டுக் திட்டங்களில் €97.8 பில்லியன் யூரோக்களை பிரெஞ்சு மக்கள் சேமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒருபுறம் Livret A சேமிப்புக்கணக்கின் வட்டிவீதம் குறைவடைந்தபோதும், மக்கள் சேமிப்புப்பழக்கத்தை கைவிடவில்லை. ஆயுள் காப்புறுதியில் பொதுமக்கள் முதலிடவும், சேமிக்கவும் தொடங்கியுள்ளனர். 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஜூன் 30 ஆம் திகதி வரையான காலத்தில் மேற்குறித்த தொகையை காப்புறுதியில் வைப்பிலிட்டுள்ளனர்.

இது கடந்த வருடம் இதே காலப்பகுதியோடு ஒப்பிடுகையில் இந்த தொகை 5% சதவீதத்தால் அதிகமாகும். வருடம் நிறைவடைய இன்னும் ஆறு மாதங்கள் உள்ளதால், இந்த சேமிப்பு தொகை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்