25,000 ஐ கடந்த அகதிகள் பயணம்!!

31 ஆடி 2025 வியாழன் 18:09 | பார்வைகள் : 997
இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரை 25,000 இற்கும் அதிகமான அகதிகள் பிரான்சில் இருந்து பிரித்தானியா சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஜூலை 30, புதன்கிழமை இரவு கலேயில் இருந்து 13 படகுகளில் 898 அகதிகள் பிரித்தானியாவைச் சென்றடைந்துள்ளதாக பிரித்தானியாவின் Home Office தெரிவிக்கிறது.
2018 ஆம் ஆண்டின் பின்னர் இத்தனை தொகையான அகதிகள் வருடத்தின் பாதி மாதத்தில் கடலைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்தவருடம் 25,000 எனும் எண்ணிக்கை செப்டம்பர் 22 ஆம் திகதி பதிவாகியிருந்தது. அதேவேளை, இவ்வருடத்தில் இருவரை 16 அகதிகளின் சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.