ஆகஸ்ட் 1 முதல் அதிகரிக்கும் மின்சாரம் மற்றும் எரிவாயு கட்டணங்கள்!!
31 ஆடி 2025 வியாழன் 22:10 | பார்வைகள் : 2692
ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளை பின்பற்றும் நோக்கில், பிரான்ஸ் அரசு ஆகஸ்ட் 1 முதல் மின்சாரம் மற்றும் எரிவாயு சந்தாக்களுக்கு உடனான TVA-வை 5.5% இலிருந்து 20% ஆக உயர்த்தவுள்ளது.
இதனால் குறிப்பாக குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் பயனாளிகள், மாதத்திற்கு சுமார் 1 யூரோ வரை கூடுதல் செலவினை சந்திக்க வேண்டியிருக்கும். அரசு இது ஒரு "நடுநிலை மாற்றம்" என தெரிவித்துள்ளதுடன், நுகர்வுக்கான கட்டணங்கள் குறைவதால் இதனால் ஏற்படும் பாதிப்பு சமநிலைப்படுத்தப்படும் என கூறியுள்ளது.
Hello Watt ஆய்வின் படி, ஆண்டு 3300 kWh-க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் பயனாளிகளுக்கே தவிர, மற்ற பயனாளிகள் கட்டண உயர்வால் பாதிக்கப்படலாம். மாறாக, அதிக மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு கட்டணங்கள் குறையக்கூட வாய்ப்பு உள்ளது.
எரிவாயு நுகர்வாளர்கள் அனைவருக்கும் கட்டண உயர்வு உறுதி, ஆனால் அது வருடத்திற்கு 15 முதல் 35 யூரோ வரை மட்டுமே இருக்கும்.


























Bons Plans
Annuaire
Scan