Paristamil Navigation Paristamil advert login

வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய ரணில்

வைத்தியசாலையில் இருந்து வௌியேறிய ரணில்

29 ஆவணி 2025 வெள்ளி 14:42 | பார்வைகள் : 168


கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைப் பெற்று வௌியேறியுள்ளார்.

இன்று (29) காலை முன்னாள் ஜனாதிபதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி வைத்தியசாலையில் இருந்து வௌியேறினாலும், மருத்துவ ஆலோசனையின்படி அவர் வீட்டிலேயே ஓய்வெடுப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க வீட்டில் தங்கியிருக்கும் போது அவரது உடல்நிலையை குடும்ப வைத்தியர்கள் உன்னிப்பாகக் கண்காணிப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்