இந்தியா தனது சுயமரியாதையை சமரசம் செய்யாது; வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் கருத்து

30 ஆவணி 2025 சனி 06:48 | பார்வைகள் : 108
வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இந்தியா தனது சுயமரியாதையை சமரசம் செய்யாது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
50% அமெரிக்க வரிகளால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டது. இது தொடர்பாக, பியூஷ் கோயல் கூறியதாவது: வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இந்தியா தனது சுயமரியாதையை சமரசம் செய்யாது. இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுக்கு தயாராக உள்ளது. வரிகளால் பாதிக்கப்பட்ட தொழில்களை அரசாங்கம் ஆதரிக்கும். உள்நாட்டு தேவையை அதிகரிக்க ஜிஎஸ்டி கவுன்சில் விரைவில் கூடும்.
ஏற்றுமதிகள் அதிகரிக்கும்
ஆனால் எந்தவொரு பாகுபாடும் இந்தியாவின் 140 கோடி குடிமக்களின் தன்னம்பிக்கையையும், சுயமரியாதையையும் பாதிக்கும். நாங்கள் தொடர்ந்து முன்னேறி புதிய சந்தைகளைக் கைப்பற்றுவோம். இந்த ஆண்டு எங்கள் ஏற்றுமதிகள் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.
எந்த பாதிப்பும்...!
ஏற்றுமதியாளர்கள் எந்த பாதிப்பும் சந்திக்காத வகையில் நடவடிக்கைகளை எடுக்க அரசு உறுதியாக உள்ளது. வணிக அமைச்சகத்தில் உள்ள நாங்கள், எங்கள் பணிகள் மூலம், உலகின் பிற பகுதிகளை அடைந்து, கைப்பற்றக்கூடிய பிற வாய்ப்புகளைப் பார்க்கிறோம்.
உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பதையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். எனவே, இந்த மாற்றங்களின் தாக்கத்தை விரைவாக நம்மால் உணர முடியும். மேலும் இது முழு உள்நாட்டு உற்பத்தித் துறைக்கும் விரைவான தேவையை அதிகரிக்கும். இவ்வாறு பியூஸ் கோயல் கூறினார்.