போதைப்பொருள் பெட்டிக்கடை போல் காட்சியளித்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் கைது!!

29 ஆவணி 2025 வெள்ளி 17:12 | பார்வைகள் : 456
பொபினியில் (Bobigny) உள்ள பாப்லோ பிக்காசோ (Pablo-Picasso) குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள். ஒரு போதைமருந்து நாயின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 2.7 கிலோ கஞ்சா ரசின், 561 கிராம் கொக்கெயின், 189 கிராம் ஆம்பெட்டமீன், 106 கிராம் கஞ்சா இலை, 10 எக்ஸ்டஸி மாத்திரைகள் மற்றும் «பெட் டோன் க்ரான்» எனும் ஆபத்தான செயற்கை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒரு சிறிய போதைப்பொருள் கடையை போன்ற தோற்றத்தில் இருந்துள்ளது. அத்துடன், ஒரு உயர்ந்த மதிப்புடைய சைக்கிளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வசித்து வந்த நபர் காவலில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளார், மற்றும் விசாரணை பொபினி காவல் நிலையத்தால் தொடரப்படுகிறது.