Paristamil Navigation Paristamil advert login

மத்திய அரசும், மாநிலங்களும் முரண்பட்டு இருக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசும், மாநிலங்களும் முரண்பட்டு இருக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்

30 ஆவணி 2025 சனி 12:18 | பார்வைகள் : 107


வலுவான மத்திய அரசும், வலுவான மாநிலங்களும் முரண்பட்டு இருக்காமல், ஒன்றையொன்று சார்ந்து , ஒவ்வொன்றும் மற்றவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், என பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: இந்திய அரசியலமைப்பானது, மத்திக்கும் மற்றும் மாநிலங்களுக்கும் இடையில் சிறந்த அதிகார சமநிலையுடன் கூடிய கூட்டாட்சி கட்டமைப்பினை உருவாக்கியது. இருப்பினும் பல ஆண்டுகளாக இந்த சமநிலை தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது.

மத்திய அரசும், மாநிலங்களும் முரண்பட்டு இருக்கக்கூடாது: முதல்வர் ஸ்டாலின்வலுவான மத்திய அரசும், வலுவான மாநிலங்களும் முரண்பட்டு இருக்காமல், ஒன்றையொன்று சார்ந்து , ஒவ்வொன்றும் மற்றவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.தொடர்ச்சியான அரசியலமைப்பு திருத்தங்கள், யூனியன் சட்டங்கள் மற்றும் மத்திய அரசின் கொள்கைகள் அதிகார சமநிலையை மத்திய அரசுக்கு சாதகமாக படிப்படியாக சாய்த்துள்ளன.

மத்திய அரசில் உள்ள பெரிய அமைச்சகங்கள், மாநிலங்களின் செயல்பாடுகளில் தலையிட்டு, நிதிக் குழு அளிக்கும் மானியங்களுக்கான நிபந்தனைகள் மத்திய நிதியுதவி திட்டங்களுக்கான ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள், பணி வாரியாக கட்டாய ஒப்புதல்கள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தும்போது அவற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர் கண்காணிப்பு போன்றவற்றின் மூலம் மாநில முன்னுரிமைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் எதிர்கால கட்டமைப்பை உருவாக்குவதே காலத்தின் கட்டாயம். இந்த நோக்கத்தின் அடிப்படையில் மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட உயர்நிலை குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பரிசீலிக்கப்பட்ட கருத்துகளை பெறுவதற்கு ஒரு கேள்வித்தாளை இக்குழு தயாரித்துள்ளது.இதனை ஆராய்ந்து விரிவான பதில்களை வழங்கிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்