Paristamil Navigation Paristamil advert login

Herta நிறுவனத்தின் Lardons Nature தயாரிப்புகள் மீளப்பெறப்படுகின்றன!!

Herta நிறுவனத்தின் Lardons Nature தயாரிப்புகள் மீளப்பெறப்படுகின்றன!!

29 ஆவணி 2025 வெள்ளி 22:13 | பார்வைகள் : 524


Herta நிறுவனத்தின் Lardons Nature தயாரிப்புகள், சால்மொனெல்லா பக்டீரியா இருப்பதற்கான சந்தேகத்தால், பிரான்ஸ் முழுவதும் உள்ள Leclerc, Carrefour, Auchan போன்ற கடைகளிலிருந்து திரும்பப்பெறப்பட்டுள்ளன. 

2x75 கிராமுடைய Lardons 2025 செப்டம்பர் 4 தேதி முடிவுத்தேதியுடன், ஆகஸ்ட் 6 முதல் 29 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. நுகர்வோர் இந்தப் பொருளைப் பெற்றிருந்தால், கடைக்கு திருப்பிச் சென்று பணத்தை மீண்டும் பெறலாம்.

சால்மொனெல்லா (Salmonella) தொற்றால் வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி மற்றும் சில சமயங்களில் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இது பொதுவாக உணவு உண்ட பின் ஒரு அல்லது இரண்டு நாட்களில் தோன்றும். தயாரிப்பு மீது குறிப்பிடப்பட்டுள்ளபடி, Lardonsகளை நன்றாக 65°C வெப்பத்தில் சமைத்தால், சால்மொனெல்லா காரணமாக ஏற்படும் ஆபத்துகள் அகற்றப்படலாம்.

வர்த்தக‌ விளம்பரங்கள்