ஸ்பெயினில் கடத்தப்பட்ட 3 வயது பிரிட்டிஷ் சிறுவன் - தாய் மீது தந்தை முறைப்பாடு

30 ஆவணி 2025 சனி 07:47 | பார்வைகள் : 233
ஸ்பெயினின் பிரபலமான கோஸ்டா டெல் சோல் (Costa Del Sol) கடற்கரைப் பகுதியில் 3 வயது பிரிட்டிஷ் சிறுவன் ஆலிவர் பக் (Oliver Pugh) கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிறுவனைக் (Oliver Pugh) கடத்தியது அவனுடைய தாயே என சந்தேகிக்கப்படுகிறது. ஸ்பெயின் மற்றும் பிரிட்டிஷ் போலீசார் இணைந்து, சிறுவன் ஆலிவரையும் அவனது தாயையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஆலிவரின் தந்தை, தனது மகன் காணாமல் போனதாக பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளதுடன், தனது மகனைக் கடத்திவிட்டதாக அவர் மனைவியின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம், ஸ்பெயின் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் பிரிட்டிஷ் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மக்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுவனையோ, அவனது தாயையோ கண்டால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்குமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 19
இறப்பு : 28 Aug 2025