Paristamil Navigation Paristamil advert login

எலும்பு தேய்மானத்தை தடுக்க உதவும் உணவுகள் ..

எலும்பு தேய்மானத்தை தடுக்க உதவும் உணவுகள் ..

21 பங்குனி 2021 ஞாயிறு 13:36 | பார்வைகள் : 10059


 எலும்புகளின் தேய்மானத்தை தடுக்க கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

 
 
அகத்திகீரை, முருங்கைகரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறிவேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்சியம் உள்ளது.
 
அதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும்.
பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும். வயதானவர்களுக்கு பால் அதிகம் ஜீரணமாவதில்லை.
 
கால்சியம் சத்துகள் நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம். காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் அபரிமிதமாக உள்ளது.
எள், கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. எனவே எள்ளை வெல்லம் உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். தினமும் 5 பாதம் பருப்புகளை ஊறவைத்து அரைத்து, அதை பாலுடன் கலந்து
குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
 
கேழ்வரகில் பாலை விடை அதிக கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம். இது கால்சியம் சத்துள்ள முழுமையான சிற்றுண்டி. பெரியவர்கள் கஞ்சி அல்லது கூழாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்