Paristamil Navigation Paristamil advert login

கிரிஸ்பியான பப்புள் இறால்

கிரிஸ்பியான பப்புள்  இறால்

30 ஆவணி 2025 சனி 11:49 | பார்வைகள் : 127


இறால் கிரேவி சாப்பிட்டு பழகிருச்சா.. இறால்ல எதாவது வித்தியாசமா சமைச்சு சாப்பிடனும்னு நினைக்கிறீங்களா.. அப்போ இந்த பப்புள் ஃப்ரான்ஸ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. எப்படி செய்றதுனு வாங்க சொல்றேன்..

தேவையான பொருட்கள் :-இறால், மைதா மாவு, ஃகான்ப்ளவர் மாவு, முட்டை, எலுமிச்சை பழம், பேக்கிங் பவுடர், எண்ணெய், தண்ணீர், உப்பு, மிளகு பொடி.

செய்முறை: இறால் மீனை சுத்தம் செய்து விட்டு, அதில் உப்பு, மிளகு பொடி, எழுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இறால் முழுவதும் படும்படி சேர்த்து கொள்ளவும்.

அரை கப் கார்ன்ப்ளவர் மாவு, இரண்டு டேபிள் ஸ்பூன் மைதா, இரண்டு முட்டையை வெள்ளை கருவை உடைத்து ஊற்றி, அரை டேபிள்ஸ்பூன் பேக்கிங் பவுடர், எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் இறாலை மாவு முழுவதும் படும்படி முக்கி எடுத்து எண்ணையில் போட்டு பொறித்து எடுத்தால் கிரிஸ்பியான பப்புள் ஃப்ரான்ஸ் ரெடியாகி விடும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்