‘ஸ்டார்’ பட இயக்குனரின் அடுத்த பட டைட்டில் இதுவா?

30 ஆவணி 2025 சனி 11:49 | பார்வைகள் : 195
கடந்த 2018 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் இளன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இயக்குனர் இளன், மீண்டும் ஹரிஷ் கல்யாணை வைத்து ‘ஸ்டார்’ படத்தை இயக்க திட்டமிட்டார். அதன்படி அறிவிப்பும் வெளியானது.
ஆனால் ஒரு சில காரணங்களால் ‘ஸ்டார்’ படத்தில் நடிகர் கவின் ஹீரோவாக நடித்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இதைத் தொடர்ந்து இளன் என்ன படம் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அந்த வகையில் நடிகர் தனுஷிடம், இளன் கதை சொன்னதாக பேச்சுகள் அடிபட்டது.
ஆனால் தனுஷின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக தனது அடுத்த படத்தை தானே இயக்கி, அதில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம் இளன்.இது கூட நல்லா இருக்கே இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளிவந்த நிலையில் தற்போது இளன் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. பியார் பிரேமா கல்யாணம் என்று தன்னுடைய அடுத்த படத்திற்கு டைட்டில் வைக்க இளன் திட்டமிட்டு இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த டைட்டில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025