Neuilly-sur-Seine : ஆயுதம் வைத்து காவல்துறைக்கு மிரட்டல்! - ஒருவர் கைது!!

30 ஆவணி 2025 சனி 12:58 | பார்வைகள் : 2035
கத்தி ஒன்றின் மூலம் காவல்துறையினரை மிரட்டிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Neuilly-sur-Seine (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் ஓகஸ்ட் 29, நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
அடிப்படையில் இது ஒரு யூத விரோத தாக்குதல் எனவும், அங்குள்ள 'சைனகியூ' எனப்படும் யூத தேவாலத்தின் அருகே வைத்து நபர் ஒருவர் கத்தி மூலம் ஒருசிலரை மிரட்டியுள்ளார். யூத மத அடையாளமான kippah தொப்பியை அணிந்திருந்தவர்களை குறித்த நபர் தாக்க முற்பட்டுள்ளார்.
காவல்துறையினர் தலையிட்டபோது, குறித்த நபர் காவல்துறையினரையும் மிரட்டியுள்ளார்.