Évreux : கூட்டத்துக்குள் பாய்ந்த மகிழுந்து! - ஒருவர் பலி.. ஐவர் காயம்!!

30 ஆவணி 2025 சனி 14:42 | பார்வைகள் : 530
கூட்டம் ஒன்றுக்குள் மகிழுந்து ஒன்று பாய்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். ஐவர் காயமடைந்துள்ளனர். சாரதி வேண்டுமென்றே மகிழுந்தை கூட்டத்துக்குள் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓகஸ்ட் 30, இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு இச்சம்பவம் Évreux (Eure) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள புகழ்பெற்ற Winston-Churchill Avenue வீதியில் உள்ள இரவு விடுதி ஒன்றின் முன்பாக நின்றிருந்த கூட்டத்தினர் மீது திடீரென மகிழுந்து ஒன்று வேகமாகச் சென்று மோதியது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர்.
உடனடியாக காவல்துறையினரும் தீயணைப்பு படையினரும் அழைக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், மகிழுந்தில் இருந்த மூவரைக் கைது செய்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
30 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். ஐவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025