Paristamil Navigation Paristamil advert login

சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

20 பங்குனி 2021 சனி 04:40 | பார்வைகள் : 9876


 சிகப்பு அரிசியை புட்டு, சத்தம், கஞ்சி, களி போன்றவற்றை செய்து சாப்பிடலாம். சாதாரண அரிசியில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருக்கும்.

 
 
இதனை சர்க்கரை  நோயாளிகள், உடல் பருமன் பிரச்சனை இருக்கும் நபர்கள் சாப்பிட கூடாது. சிவப்பு அரிசியை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
 
உடல் எடையை குறைக்கும் நபர்களுக்கு, சிகப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. அதில் உள்ள நார்சத்து காரணமாக, உடலில் இருக்கும் அதிகப்படியான  கொழுப்புகள் குறையும். சிவப்பு அரிசி புற்றுநோய்க்கு எதிராகவும், புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகவும் போராடும்.
 
எலும்புகளை நன்கு வலுப்படுத்தும் தன்மையும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. தலைமுடி வளர்ச்சியில் சிகப்பு அரிசி பெரும் உதவி செய்கிறது. சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை சரி செய்கிறது.
 
அதோடு இந்த ரைஸ் பிரான் ஆயில், இதய ஆரோக்கியத்துக்கு செயல்படு உணவாக இருந்து காக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம், இதில் இதய  ஆரோக்கியத்துக்கு உதவும் வைட்டமின் பி, மக்னீசியம், நார்ச்சத்து உள்ளிட்டவை இருப்பதுதான். 
 
வெள்ளை அரிசியை சமைப்பதைவிட, சிவப்பு அரிசி அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதைக்கொண்டு சாதம் தொடங்கி தோசை, புட்டு, ரவையாக்கி உப்புமா, அடை,  கொழுக்கட்டை என எத்தனையோ செய்வதற்கு வழியுண்டு. சிவப்பு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வோம். ஏனெனில், அது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமான  தானியம்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்