உக்ரைன் மீது 537 ட்ரோன்கள், 45 ஏவுகணைகளை ஒரே இரவில் பொழிந்த ரஷ்யா!

30 ஆவணி 2025 சனி 16:29 | பார்வைகள் : 272
உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் இரவில் நடத்திய கொடூர தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா ஒரே இரவில் உக்ரைன் மீது 537 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை கொண்டு தாக்கியுள்ளதாக உக்ரேனிய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பெரும்பாலான ஏவுகணைகளை அழித்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதே சமயம் 5 ஏவுகணைகள் மற்றும் 24 ட்ரோன்கள் இன்னும் ஏழு இடங்களைத் தாக்கின என்றும், சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளின் சிதைவுகள் 21 இடங்களில் விழுந்ததாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த தாக்குதலில் Zaporizhzhia நகரில் 14 மாடி கட்டிடங்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட தனியார் வீடுகள் சேதமடைந்தன.
இதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 3 குழந்தைகள் உட்பட குறைந்தது 22 பேர் காயமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தின் இடையில் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேலும் தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டாகவும் தகவல்கள் கூறுகின்றன.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025