கோட்டாபய சீஐடிக்கு அழைப்பு!

31 ஆவணி 2025 ஞாயிறு 13:21 | பார்வைகள் : 996
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, இரண்டு தனித்தனி முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
காலி முகத்திடலில் நடைபெற்ற போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கட்டுப்படுத்தத் தவறியுள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.