Paristamil Navigation Paristamil advert login

100 பந்துகள் போட்டியில் அதிவேக சதம் விளாசிய வீராங்கனை!

100 பந்துகள் போட்டியில் அதிவேக சதம் விளாசிய வீராங்கனை!

31 ஆவணி 2025 ஞாயிறு 16:38 | பார்வைகள் : 125


மகளிர் The Hundred தொடரில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் வீராங்கனை டேவினா பெர்ரின் 42 பந்துளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த The Hundred போட்டியில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் வுமன் மற்றும் லண்டன் ஸ்பிரிட் வுமன் அணிகள் மோதின.

முதலில் ஆடிய நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் வுமன் 5 விக்கெட்டுக்கு 214 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை டேவினா பெர்ரின் (Davina Perrin) 43 பந்துகளில் 5 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் விளாசினார். போஎபே லிட்ச்ஃபீல்ட் 35 (19) ஓட்டங்களும், நிக்கோலா கேரி 31 (12) ஓட்டங்களும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய லண்டன் ஸ்பிரிட் வுமன் அணி 9 விக்கெட்டுக்கு 172 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக ஜார்ஜியா ரெட்மயனே 50 (30) ஓட்டங்கள் விளாசினார்.

டேவினா பெர்ரின் 42 பந்துகளில் சதம் அடித்ததன் மூலம், The Hundred தொடரில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த முதல் வீராங்கனை மற்றும் இரண்டாவது நபர் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பு ஆடவர் போட்டியில் ஹரி புரூக் 41 பந்துகளிலும், மகளிர் போட்டியில் டாமி பியூமண்ட் 52 பந்துகளிலும் சதம் அடித்திருந்தனர்.

 

The Hundred தொடரில் அதிவேக சதம் அடித்தவர்கள்

 

ஹாரி புரூக் (Harry Brook) - 41 பந்துகள்

டேவினா பெர்ரின் (Davina Perrin) - 42 பந்துகள்

வில் ஜேக்ஸ் (Will Jacks) - 47 பந்துகள்

வில் ஸ்மீத் (Will Smeed) - 49 பந்துகள்

டாமி பியூமண்ட் (Tammy Beaumont) - 52 பந்துகள்

 

வர்த்தக‌ விளம்பரங்கள்