Paristamil Navigation Paristamil advert login

காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா?

காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா?

31 ஆவணி 2025 ஞாயிறு 17:10 | பார்வைகள் : 183


ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பேய் சீரியஸ் ஆக காஞ்சனா 4ம் பாகம் உருவாகி வருகிறது .இப்படத்தை கோல்ட் மைன்ஸ் நிறுவனத்தின் மூலம் மணி ஷா தயாரிக்கின்றனர். இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகையான நோரா பதேகி நடிக்கின்றார். வில்லன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எப் ராமசந்திரா ராஜூ நடிக்கிறார்.

ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் சென்னையில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் சுமார் 30 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த கட்ட படப்பிடிப்பில் காஞ்சனா சீரியஸ் ஸ்பெஷலான பிளாஷ்பேக் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும் என்கிறார்கள். தற்போது இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்காக அவருக்கு பெரிய சம்பளம் பேசப்பட்டுள்ளது என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர் .


 

வர்த்தக‌ விளம்பரங்கள்