பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கிரீன்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்!!

31 ஆவணி 2025 ஞாயிறு 17:08 | பார்வைகள் : 344
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜோன்-நோயல் பரோ, அமெரிக்காவின் அரசியல் அழுத்தங்களுக்கு எதிராக கிரீன்லாந்து மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க கிரீன்லாந்துக்கு சென்றுள்ளார்.
இது, டிரம்ப் உடன் தொடர்புடைய மூன்று அமெரிக்கர்கள் கிரீன்லாந்தில் தாக்கம் செலுத்தும் முயற்சிகளை மேற்கொண்டதாக டானிஷ் ஊடகம் வெளியிட்ட தகவலுக்குப் பிறகு வந்தது. இந்த பயணம், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் உள்ள நட்பையும், பிரான்ஸ் தரும் ஒற்றுமையையும் வலியுறுத்துவதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
நூக் நகரில், அவர் பிரஞ்சு கடற்படையின் கப்பலை பார்வையிட்டு, கிரீன்லாந்து பிரதமர் யென்ஸ்-ப்ரெடெரிக் நீல்சன் (Jens-Frederik Nielsen) மற்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் மோட்ஸ் பெல்டுடன் (Vivian Motzfeldt) சந்தித்தார். இதற்கு முன்னர், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் கிரோன்லாந்துக்கு சென்று, ஐரோப்பிய ஒற்றுமையை வலியுறுத்தியிருந்தார்.
டிரம்ப் கிரீன்லாந்தை அமெரிக்காவுக்குத் தேவையானதாக கூறி அதைப் பெற முயன்ற நிலையில், கிரீன்லாந்து அதனை விற்பனை செய்யமாட்டோம் என்றும் தாங்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்போம் என்றும் தெரிவித்தது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025