Paristamil Navigation Paristamil advert login

குப்பையிலிருந்து உருவாக்கப்பட்ட AI மின்சார சூப்பர் பைக்- கல்லூரி மாணவர்கள் சாதனை

குப்பையிலிருந்து உருவாக்கப்பட்ட AI மின்சார சூப்பர் பைக்- கல்லூரி மாணவர்கள் சாதனை

31 ஆவணி 2025 ஞாயிறு 19:27 | பார்வைகள் : 134


குப்பையிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பம் கொண்ட மின்சார சூப்பர்பைக்கை பொறியியல் மாணவர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

Garuda என பெயரிடப்பட்டுள்ள இந்த பைக், 50 சதவீதம் கழிவு பொருட்களில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு புதுமையான வாகனமாகும்.

இது சூரத்தில் உள்ள ஒரு சிறிய பணிமனையில், Bhagwan Mahavir பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 3 இளநிலை பொறியியல் மாணவர்கள் ஷிவம் மௌரியா, குருபீத் அரோரா மற்றும் கணேஷ் படில் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இந்த வாகனம் Raspberry Pi கணினி அமைப்பை மையமாகக் ஒண்டு செயல்படுகிறது.

இது voice command ஏற்கும் திறன், வேகக் கட்டுப்பாடு, தானாகவே நிறுத்தும் திறன் போன்ற பல AI அம்சங்களை கொண்டுள்ளது.

WiFi இணைப்பு மூலம் வாகனத்துடன் தொடர்பு கொள்ளும் வசதியும் உள்ளது.

கருட வாகனத்தில் பாதுகாப்பு அம்சங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.இரண்டு சென்சார்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றன.

12 அடி அருகில் வாகனம் வந்தால் வேகத்தை குறைக்கும், 3 அடி அருகில் தடையை கண்டால் Stop என்ற குரல் கட்டளைக்கு உடனே நிறுத்தும் திறனும் உள்ளது.

GPS navigation, phone calling மற்றும் music playback, முன்-பின் கமெரா, டச் ஸ்க்ரீன் மற்றும் mobile wireless charging பொன்னர் வசதிகளும் உள்ளன.

இந்த பைக் eco mode-ல் 220 கி.மீ. மற்றும் sports mode-ல் 160 கி.மீ. வரை பயணிக்க முடியும்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்